உள்ளூர் ஆயுர்வேதத்தின்படி உயர்தர சத்தான உணவுகள் மற்றும் தேசிய மசாலாப் பொருட்களை தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு திட்டம்.
வெலிமடை பிரதேச செயலாளர் சமிந்த வீரசிங்க மற்றும் பதுளை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு. விஜயபண்டரவின் வழிகாட்டுதலின் பேரில் வெலிமடை சமூர்த்தி சமூக மேம்பாட்டு பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி கெப்பெட்டிபொலவில் உள்ள வெலிமட சமூர்த்தி வங்கியின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந்த திட்டத்தின் நோக்கம் மக்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதாகும்
கடந்த காலங்களில் எங்கள் கிராமவாசிகள் பயன்படுத்திய உள்ளூர் மசாலாப் பொருட்கள் குறித்தும், பாதுகாப்பான முறையில் உணவை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது
பங்கேற்றவர்களுக்கு சாம்பல் வழைக்காய்ளை பயன்படுத்தி நூடுல்ஸ் தயாரிப்பத கொஹில கிழங்கை பயன்படுத்தி சோசேஜஸ் தயாரித்தல் மற்றும் ஊட்டச்சத்து நிரப்புதல் ஆகியவற்றைப் பற்றிய அறிவு வழங்கப்பட்டதுடன் பங்குபற்றியவர்களுக்கும் வழங்கப்பட்டது .
திவிதொடவெல ஆயுர்வேத மருத்துவ மையத்தின் யு.கே.எஸ் திலுஷ, N.A.R.R. திருமதி நிஸ்சங்க மருத்துவ அலுவலர், வெலிமடை சமூர்த்தி சமூக அடிப்படையிலான வங்கி முகாமையாளர் திருமதி எல்.எஸ். புவனேகபாஹு, சமூக மேம்பாட்டு அலுவலர் பிரியந்த புஷ்ப குமார மற்றும் வெலிமடை பிரதேச செயலக ஆயுர்வேத அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தமயந்தி தெல்தெனிய போனறோறுடன்பொதுமக்களும் பங்குபற்றினர்.















